Ad Widget

இலங்கை அணிக்கு நேர்ந்த அநீதி; போட்டியும் வெற்றி தோல்வி இன்றி நிறைவு

நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை இலங்கை அணியினர் தெரிவித்தனர்.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களும், இலங்கை அணி 288 ஓட்டங்களும் எடுத்தன. 4-வது நாளில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

Nuwan Pradeep was

இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 58 ஓட்டங்களுடன் இருக்கையில் நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியா) அதனை நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீபிளேயில் பந்து வீசுகையில் நுவான் பிரதீப்பின் கால் கிரீசை தாண்டவில்லை என்பது தெரிந்தது.

இந்த விவகாரம் குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்டு போட்டி நடுவரை அணுகி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இதற்கிடையில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டனர்.

Sri Lanka flag

சுமார் 45 நிமிடம் தேசிய கொடி பறந்தது. மைதானத்துக்குள் தேசிய கொடியை அணி நிர்வாகம் பறக்க விடக்கூடாது. இது பற்றி அறிந்ததும் போட்டி அமைப்பு குழுவினர் இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியை அகற்றினார்கள்.

இதற்கிடையில் 362 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

5-ஆவது நாளில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அப்போது இலங்கை அணி 24.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

Related Posts