ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கையர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்தார்.
ஜப்பான் ரூசூ இபரகி மாநிலத்தின் சுகுபா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யுக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தாய்லாந்து விஜயத்தின் போதும் உதயங்க வீரதுங்க அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.