தலைக் கவசங்களுக்கு SLS தரம் அறிமுகம்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் எஸ். எல். எஸ். தரமொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதன்படி, செப்டெம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தலைக் கவசங்கள் எஸ். எல். எஸ். 517 தரத்தை உடையதாக இருக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்தது.

உரிய தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதால் விபத்துக்களின் போது அதிக உயிரிழப்புகள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட போக்குவரத்து தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன, செப்டெம்பரின் பின்னர் எஸ். எல். எஸ். தரமுள்ள தலைக்கவசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தற்பொழுதுள்ள தலைக் கவசங்கள் விபத்துக்களின் போது தூக்கியெறியப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related Posts