நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தந்துதவுமாறும் கோரியுள்ளனர்.
ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை 11.06.2016 அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்றபோது காணாமல் போயுள்ளார். இவ் யுவதி தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எந்தவித தகவலும் கிடைக்கப்படவில்லையென பெற்றோர் கூறுகின்றனர். இவ் யுவதி தொடர்பாக யாராவது தகவல் தெரிந்ருதால்கி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.