Ad Widget

ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆண்டர்சனுக்கு ஐ.சி.சி. கண்டிப்பு

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த ரன்னை எடுக்க அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தின் பேட்டிங்கும் ஓரளவிற்கு உதவியது. அவர் 49 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் எடுத்தார். இவர் பெரேராவுடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தார்.

Anderson-reprimanded-for-breaching-ICC-Code-of-Conduct_SECVPF

இதனால் கடுப்பான ஆண்டர்சன் பந்து வீசிக்கொண்டு ஹெராத்தை சீண்டிக்கொண்டே இருந்தார். இதைக் கவனித்த மைதான நடுவர் எஸ். ரவி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஆண்டர்சனிடம் கூறினார். அப்போது ரவியிடம் ஆண்டர்சன் முறைத்துக்கொண்டார்.

இதனால் மைதான நடுவர்கள் எஸ். ரவி, ராட் டக்கர் மற்றும் 3-வது நடுவர் ஆகியோர் ஆண்டர்சன் மீது குற்றம்சாட்டினார்கள்.

விசாரணையில், வீரர்களின் நன்னடத்தை மற்றும் வீரர்கள் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி.யின் விதியின் ஷரத்து 2.1.1-ல் கூறியதை மீறியதாக தெரியவந்தது.

இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு ஐ.சி.சி.யின் முடிவை ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதனால் அவரது செயல்பாடு லெவல் 1-க்குள்தான் வரும் என்பதால் ஐ.சி.சி. அவரை கண்டித்து அத்துடன் விட்டுள்ளது.

லெவல் 1-ஐ மீறுபவர்களுக்கு எச்சரிக்கை, கண்டிப்பு அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீத அபராதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தண்டனையாக வழங்கலாம் என்பது விதிமுறை.

இலங்கை அணிக்கு இன்னும் 330 ஒட்டங்கள் வெற்றிக்கு தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் இறுதி நாள் இன்றாகும்.

Related Posts