பரணகம ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது!

காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வுள்ளதாக அக்குழுவின் தலைவர் மக்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இக்குழு கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தபோதும் எதிர்வரும் மாதம் இக்குழு கலைக்கப்படவுள்ளது.

இதன்படி தமது விசாரணையை காணாமல்போனோர் அலுவலகத்தில் கையளிக்க விருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

Related Posts