எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.