Ad Widget

மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

sanga-bell-2

sanga-bell-1

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார்.

அந்தவகையில் நேற்றய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்க குறித்த மணியை ஒலிக்கவிட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி நேற்றய ஆட்ட நேரமுடிவில் 279 ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Posts