லெபனான், தாய்லாந்து, சவூதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு பின்வரும் பணிக்கமர்த்தப்பட்டுள்ள நபர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என அறிவித்துள்ளன.
1) திருமதி. களுவாகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 3662097) அல்லது டிங்கிரியலாகே அசிலின் – லெபனான்
2) திருமதி. ஹேவா தொண்டில்லேகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 4577679) அல்லது இந்திரா கொடிக்கார – லெபனான்
3) திரு. அண்ட்ரா படுகே நிமல் ஆனந்த (அ. அ. இல. 611321090 ஏ) – தாய்லாந்து
4) திருமதி. பீரிஸ்கே சந்திரிகா பிரியந்தி (கடவுச்சீட்டு இல N 4183272 )- சவூதி அரேபியா
5) திருமதி. வென்தாய கமராலலாகே டிரோஷினி மேனகா (கடவுச்சீட்டு இல N 4330239) – ஜோர்தான்
இவர்களுடைய நெருங்கிய உறவினர் அல்லது நெருங்கிய உறவினரைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கும் யாராவது ஒருவர் கொழும்பு 01, சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தையிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர். தொலைபேசி இல – 0112437635