உடுப்பிட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் (உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, சமுர்த்தி வங்கி அருகில்) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

யாழ்போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்படும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் வைத்திய கலாநிதி ம. அரவிந்தன் (அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்) தலைமையில் சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினரால் பொதுமக்களுக்கான பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.

* நீரிழிவு (சலரோகம்) பரிசோதனை (Fasting Blood Sugar)
* கொழுப்பு (கொலஸ்ரோல்) பரிசோதனை (Cholesterol Checkup)
* இரத்த அழுத்த சோதனை (Blood pressure)
* உயரம், நிறை அளக்கப்பட்டு தகுந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள்
* பொது மருத்துவம்

முக்கிய குறிப்பு:
கொலஸ்ரோல், நீரிழிவு பரிசோதனை செய்ய வரும் பொதுமக்கள் மருத்துவ முகாமுக்கு முதல் நாளான (வியாழக்கிழமை) இரவு உணவை 8.00 மணிக்கு முன்னர் சாப்பிடவும். சிகிச்சை நாளான வெள்ளிக்கிழமை காலை தண்ணீர் மாத்திரம் அருந்தலாம். (தவிர, எவ்வித உணவோ, தேநீரோ அருந்த வேண்டாம்)

சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் தங்களிடம் ஏற்கனவே கிளினிக் கொப்பி இருந்தால் அதனை கட்டாயம் கொண்டு வரவும்.

சிகிச்சைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாகும்.

குறிப்பாக 40 வயதைத் தாண்டிய மக்கள் அனைவரும் உங்கள் ஊரில் இடம்பெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடையுமாறு உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts