கொழும்பு கொஸ்கம குண்டு வெடிப்புச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்த சிங்களப் பெண் ஒருவர் ‘இப்படிக் குண்டுகளையா வன்னியில் போட்டு தமிழர்களைக் கொன்றார்கள்‘ என கேட்டுப் புலம்பியுள்ளார்.
இராணுவ முகாம் இருந்த பகுதிக்கு அருகில் குடும்பத்துடன் வசிக்கும் இப் பெண்ணின் வீடும் குண்டு வெடிப்பால் கடும் சேதமடைந்திருந்தது.
தனது வீட்டில் பறந்து வந்து கிடந்த பாரிய குண்டு ஒன்றைப் பார்த்து அதிர்ந்த குறித்த பெண் ‘இப்படிக் குண்டுகளைப் போட்டா தமிழர்களை வன்னியில் கொன்றார்கள்‘ என அங்கிருந்தவர்களுக்கு கூறிப் புலம்பியுள்ளார் என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.