Ad Widget

பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?

இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் கர்நாடகாவின் மங்களூரில் உள்ள சில கோயில்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தார்கள்.

raja

அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அதில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற பொருள்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது.

பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அதிகாரிகள் இளையராஜாவுடன் வாக்குவாதம் செய்வதை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்தபோது அதை அழிக்கச் சொல்லி நிர்பந்தம் விடுக்கப்பட்டது. இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசி, ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரைக் காக்கவைக்கவேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இந்தப் பிரச்னையால் இளையராஜா பயணிக்க இருந்த விமானம் கிளம்ப தாமதமானது. பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார்கள். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். விமான நிலையத்தில் அதிகாரிகள் இளையராஜாவின் பையைப் பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related Posts