முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன்களை திருப்பி செலுத்திய பின்னர் வரி வீதங்கள் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய அவர், ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன்களுக்காகவே இன்று வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறுகிய கால இலக்கின் அடிப்படையில் வரிகளை குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.