கொஸ்கம-சலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் வெடித்து அழிந்துபோயுள்ளதாக ஆங்கில நாழிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் 9000 தொன் வெடிபொருட்கள் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன. இதன் பெறுமதி 1000கோடியாகும்.
இந்த வெடிபொருட் களஞ்சியசாலை சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் 1990 களில் சலாவ பகுதியில் ஆயுதக் களஞ்சியச்சாலை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி களஞ்சியசாலை அமைக்கப்பட்டது.
இந்த ஆயுதக் களஞ்சியசாலையில் 20 தொன் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்தன. போர் நிறைவடைந்ததும் 10 தொன் வெடிபொருட்கள் வியாங்கொட ஆயுதக் களஞ்சியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.