இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல, அதனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலேயே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் கிடைப்பதற்கு வழியமைக்க வேண்டும் என, மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதற்காக நாங்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான சூழலை தற்போதை அரசாங்கம் ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது மிக கூடிய அக்கரை செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் மஞ்ச வனப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் பிரதான மண்டப திறப்பு விழா நேற்று ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதில், சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.