ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் தீ விபத்து!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்ட தனியார் விடுதியொன்றைத் திறந்துவைக்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ பரவியுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

ஐந்து நட்சத்திர விடுதி திறப்பு விழாவானது புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாவை வெட்டித் திறந்துவைத்தபின்னர் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இதனையடுத்து விடுதியின் விருந்தினர் வளாகத்தில் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஓலையினால் செய்யப்பட்ட கூடாரமொன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதயைடுத்து தீயணைப்புப் வீரர்கள் தீயை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்தில் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Related Posts