திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக வைத்திருக்குமாறு அந்நிலையம் அறிவித்துள்ளது.