இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அதிகபட்மாக அலெக்ஸ் ஹாலஸ் 83 ஓட்டங்களும், ஜோ ரூட் 80 ஓட்டங்களும், பேர்ஸ்டோ 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
முன்னதாக அணித்தலைவர் அலஸ்டயர் குக் 15 ஓட்டங்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். குக் 20 ஓட்டங்கள் எடுத்திருந்தால், 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர், உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டும் இளம் வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார்.
இலங்கைத் தரப்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.