Ad Widget

25 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது வறுத்தலைவிளான் பாடசாலை

வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வருடம் ஏப்பரல் 10 ஆம் திகதி அன்று இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையத்திலருந்து இருபத்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட குறித்த பாடசாலை புனரமைக்கப்படாமல் பற்றைள் வளர்ந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் அயல்பகுதி மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இணைந்துகொள்ள முடியும் என பாடசாலை சமூகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசலை மேலும் திறம்பட இயங்க வேண்டுமாயின் அயல் பகுதிகளும் விடுவிக்கப்பட்டு அங்கும் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பாடல் வேண்டும் எனவும். இவ்வாறு மீள குடியமர அனுமதிக்கப்படுவதன் மூலமே பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சிறந்த கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts