பிரதமருக்கு அழைப்பாணை

உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ள வழக்கொன்றில் தன்னை ஆஜராகுமாறு அழைப்பாணை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கையாகும் என்றும் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் கூறினார்.

நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட நாடாளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Posts