இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரத்தை ஆரம்பித்துவைத்து அதன் முதலாவது கொடியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரர் கோவிலில் இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனினால் அதன் முதலாவது கொடி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அணிவிக்கப்பட்டது. இந்து சமய அறநெறிப் பாடசாலைக் கல்வி கொடி வாரம் மே 24ஆம்திகதி முதல் மே 31ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.