ரோணு சூறாவளியின் தாக்கம் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது,
இதனால் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.