இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகல துறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸுக்கு, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடும் போது அந்த அணியின் முன்னணி வீரர் ஸ்டோக்ஸ் 12 ஓட்டங்களை எடுத்தார். 7 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
2ஆ-வது நாள் அவர் பந்து வீசும்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அடுத்த நாள் காலையில் களம் இறங்கினார். ஆனால், அவரால் சிறப்பாக செயற்பட முடியவில்லை. உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் அடுத்த டெஸ் டில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.