மீண்டும் இன்று மழை பெய்யும்

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று குறைவடைந்து காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வட மேல், தெற்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று திங்கட்கிழமை மழை பெய்யும் என திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Posts