சீரற்ற காலநிலையைக் கணிப்பிடுவதற்கென நிறுவப்பட்ட இயந்திரம் செயலிழப்பு

ஸ்ரீலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கணிப்பிடுவதற்கு 500 கோடி ரூபா செலவில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுள்ள உயர் தொழிநுட்பமிக்க இயந்திரம் செயலிழந்துள்ளதாக வானிலை அவதான நிலைய பணிப்பாளர் லலித் சந்திரபால தெரிவித்தார்.

காலநிலை நிலைமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 500 கோடி ரூபா செலவில் இயந்திரமொன்று கொண்டுவரப்பட்டு கொன்கல மலையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இயந்திரமானது கடந்த 2015 இல் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாகவும், இதற்குத் தேவையான இயந்திர உதிரிப்பாகங்கள் வெளிநாடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட வேண்டும் என வானிலை அவதான நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த இயந்திரத்தினுடாக காலநிலை நிலைமையை துல்லியமாக கணிப்பிட முடியாது எனக்கூறிய அவர்,

இருப்பினும் காலநிலை தன்மையை அவதானிக்கும் நோக்கிலேயே இந்த இயந்திரம் ஸ்ரீலங்காவில் நிறுவப்பட்டதாக மேலும் குறிப்பிட்டார்.

Related Posts