கொழும்பில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை – மக்கள் மத்தியில் அச்சம்!

கொழும்பில் சிலநாட்களாகத் தொடர்ந்துவந்த சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வானம் சற்று வெளித்திருந்தது. இன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ரோனு’ சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் அது தற்போது நாட்டைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தொடர்கின்ற மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில நாட்களில் குறைவடையும் எனவும் வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆனால், இன்று கொழும்பில் இடியுடன்கூடிய காலநிலை நிலவுவதால் மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts