யாழில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகத்தலுக்குமான பொறிமுறை யாழ் மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும் நலன் விரும்பிகள் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளருடன் 0773957894 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts