இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
‘ரோனு’ சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80கிலோமீற்றராகக் காணப்படும் எனவும் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.