இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், களனிகங்கையின் நீர்மட்டம் 7 மீற்றர்வரை உயர்ந்து பெருக்கெடுத்துப் பாய்வதால் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் களனி கங்கையின் கரையோரமாக உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்துடன் முதலைகளும் வீடுகளுக்குள் புகுந்ததனால் மக்கள் அச்சத்திலுள்ளனர்.
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.