முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக வடக்கு மாகாணசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், எனப் பெருமளவானோர் கலந்துகொண்டபோதிலும் கூட்டமைப்பின் தலைவர், மற்றும் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
- யாழ் பல்கலையில் நினைவேந்தல் நிகழ்வு!!
- வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி!
- சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்
- முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்
- வடக்கில் தடையின்றி நினைவுதினம் அனுஷ்டிக்கமுடியும்!
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு