மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலங்கபிட்டிய பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.