அரநாயக்க சென்றார் ஜனாதிபதி

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts