வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
‘இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்’ என சஜீத் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார்.
அவரது அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சொன்னார்.