பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.