பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.
இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.
பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் விடயம் வெளியில் வராமல் மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த மாணவியை சமரசப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
சிரேஷ்ட மாணவர்களால் தனக்கு அளிக்கப்பட்ட கொடூர பகிடிவதையின் அச்சம் காரணமாக குறித்த மாணவி மீண்டும் படிப்பைத் தொடர்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.