13 பல்கலை மாணவர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

களனி பல்கலைக்கழக நிர்வாகிகளின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 13 மாணவர்களை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதால் கடந்த 26ம் திகதி மாலை 05.00 மணிக்குள் அனைவரையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சில மாணவர்கள் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ளாது அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு பலமுறை நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகிகளால் இது குறித்து களனி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பந்தப்பட்ட 13 மாணவர்களையும் மஹரகம நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து நேற்று அவர்களை கடுமையாக எச்சரித்து நீதவான் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts