டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களை தெளிவுபடுத்துவதால் மாத்திரம் டெங்கு நோய் பெருகுவதை தடுக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இதனைத் தடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து கொழும்பில் டெங்கு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த நாட்களில் புகை அடிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.