வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு போராட்டங்கிளன் பின் தங்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை விரைவில் வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
வடமாகாண சபை அமர்வு இன்றயை தினம் நடைபெறுகின்றது.
இந்த நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மாகாண சபைக்கு முன்பாக கூடி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.