Ad Widget

வித்தியா வழக்கில் கைதானவர் கொழும்புக்கு வந்தது எவ்வாறு என அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (09) ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 9 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்படி, இவ் வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேகநபர் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தெளிவான அறிக்கையினை இவ் வழக்கின் அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு, இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts