பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து சில ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரச்சினை ஏற்படுவது பிற நாடுகளிலும் உள்ளது, ஆனால் இலங்கை பாராளுமன்றத்தில் இரத்தம் சிந்தப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயம் என, அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.