நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் மேல் மற்றும் தென் கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.