இன்று சூரியனில் கருப்பு புள்ளி!! வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது!!

சூரியனின் இன்றையதினம் கரும்புள்ளி ஒன்று ஏற்படுவதை இலங்கையில் இருந்து அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.42 முதல் 6.16 வரையான காலப்பகுதியில் இதனை அவதானிக்க முடியும்.

சூரியனை 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதன் கிரகம் தமது சுற்றுப் பாதையில் கடந்து செல்கிறது.

இதன்போது இந்த அரிதான கரும்புள்ளி ஏற்படுகிறது.

இதனை இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்த முறை அவதானிக்க முடியும்.

இதனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.

Related Posts