யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவலையும் விசனமும் அடைந்துள்ள சமூக நலன்விரும்பிகள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது.
யாழ்.ஆயர் ஞானப்பிரகாசம் உட்பட்ட கிறிஸ்தவ, இந்து மத குருமார், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், ஊடகத்துறையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைகள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகங்கள் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை எதிர்காலத்தில் கொண்டிருப்பதற்கான அடித்தளப்பணிகள், தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அரசியல் மத ரீதியான அணுகுமுறைகளுக்கு அப்பால் சமூக மேம்பாட்டிற்கான குறிப்பாக கல்வித்துறையில் மேம்பாடு காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,
இதற்கு எந்தெந்த வழிகளில் உதவிகள், ஒத்தாசைகள், பெற்றுக்கொள்ளவது தொடர்பாக சந்திப்பில் கலந்துகொண்ட பல்வேறு தொழில்சார் நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.