முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜெனீவாவில் உள்ள சர்வதேச பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியினைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபருக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அவருக்கு இராணுவப் பாதுகாப்பு அவசியம் என்பதுடன் அது குறித்து கடிதத்தில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர்தான் மகிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.