தமிழ்நாட்டில் திருச்சி புத்தூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி டெல்லி மேல்-சபையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மேற்கண்டவற்றில், உத்தரபிரதேசத்தில் 9, டெல்லியில் 5, மேற்கு வங்காளத்தில் 2, பீகார், கர்நாடகா, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 1 என்றவகையில் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை விதிகளை மீறி செயல்பட்டு வருவதால், போலி பல்கலைக்கழகங்கள் என பல்கலைக்கழக மானியக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.