தனியார் பேருந்துக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பெறுமதிசேர் வரி (வற்) அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களினால் மருதானை சனசமூக நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.