கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானது.
வடமாகாணத்தின் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள், குறைபாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளன.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.