யாழ்பாணத்திலுள்ள மணிக்கூட்டு கோபுரம், கடந்த பல வருடங்களாக கவனிப்பார் அற்று இருக்கும் நிலையில், மாலை 4 மணி, 7 மணியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் அனைத்து நேரங்களுக்குமான ஒலிகள் மாறுபட்டே எழுப்பப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தின் அடையாள சின்னங்களில் இம் மணிக்கூட்டு கோபுரமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செயலிழந்து கிடக்கும் மணிக்கூட்டு கோபுரத்தை மீண்டும் புதுப்பித்து அது சரியான முறையில் இயங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.