புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச்சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்.
காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும்இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்குமுறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்குடியிருப்பு நகரத்தில் இராணுவ முகாம் இருப்பது சமுதாயச்சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கின்றது. எமது கலாசாரத்திலும் பெரும் பாதிப்பைஏற்படுத்துகின்றது.
இங்குள்ள சில படையினரின் செயற்பாடுகளைப் பாடசாலை மாணவிகள் சகிக்க முடியாதநிலையில் உள்ளனர். அவற்றை வெளியில் சொல்ல முடியாது மூடி மறைக்கின்றனர்.
இராணுவத்தினருடைய செயற்பாடுகள் தொடர்பாக எனக்கு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
காலையும், மாலையும் பயிற்சி என்ற போர்வையில் இந்த வீதியைப் பாவிக்கும்இராணுவத்தினர் தனியான ஒரு இடத்தில் அல்லது ஒரு மைதானத்தில் தங்களுக்கான பயிற்சிகளைச்செய்வதுதான் சிறந்ததாக இருக்கும் என்றார்.