Ad Widget

பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 15 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

fish

நேற்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள், இவ்வாறான மீன்களை எடுத்து பரிசோதனை செய்தபோது மீன்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் அவ்வாறான மீன்களை எடுத்து பொதுச்சுகாதார அதிகாரிகள் அழித்துள்ளனர்.

குறித்த மீன்களின் பெறுமதி அறுபதாயிரம் ரூபா மதிக்கத்தக்கது என சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணையினை சுகாதார திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts